அடுத்தடுத்து விலகல்கள்... ‘பாரதி கண்ணம்மா’ நாயகன் அருணும் பாதியில் வெளியேறுகிறாரா?

அடுத்தடுத்து விலகல்கள்... ‘பாரதி கண்ணம்மா’ நாயகன் அருணும்  பாதியில் வெளியேறுகிறாரா?

விஜய் டிவியில் இரவு ப்ரைம் ஸ்லாட்டில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. மூன்று வருடங்களைக் கடந்து ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலின் கதைக்களமும் காட்சிகளும் நெட்டிசன்களிடம் அடிக்கடி ட்ரோலில் சிக்கினாலும், டிஆர்பி-யில் நல்ல இடத்தில் இருக்கிறது.

அதேசமயம், முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் அடுத்தடுத்து விலகுவதால் கதைக் களம் பல முறை மாற்றம் கண்டிருக்கிறது. இந்நிலையில், இத்தொடரின் நாயகன் அருணும் விரைவில் வெளியேறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் கதாநாயகியாக ரோஷினியும் கதாநாயகனாக அருணும் நடித்து வந்தனர். இதில் ரோஷினி சினிமா வாய்ப்புகளுக்காக சீரியலைவிட்டு விலகினார். ஆனால், பெரிய திரைக்குப் போகாமல் மீண்டும் சின்னத்திரையிலேயே அதாவது விஜய் டிவியின் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் இப்போது வினுஷா தேவி நடித்துவருகிறார்.

ரோஷினிக்கு முன்பே அந்த சீரியலில் இருந்து பாரதியின் தம்பியாக நடித்துவந்த அகிலன் விலகினார். அடுத்து அகிலனின் மனைவி அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணியும் விலகினார். இப்போது அவர் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கண்மணி விலகியபோது ‘பாரதி கண்ணம்மா’ இயக்குநர் பிரவீன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ’எத்தனை ரீப்ளேஸ்மெப்ட்’ என அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரங்கள் சீரியலைவிட்டு விலகுவது பற்றி சொல்லியிருந்தார்.

இப்போது அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்துவரும் அருணும் விலக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அருண் இதற்கு முன்பு ‘மேயாத மான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பரவலான பார்வையாளர்களிடம் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அருண் தற்போது சினிமாவில் முழுமூச்சாக இறங்க இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாகவும் அவருக்குப் பதிலாக சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சஞ்சீவ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். ’மெட்டி ஒலி’, ‘திருமதி செல்வம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும், கடந்த ‘பிக் பாஸ்’ ஐந்தாவது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.

அருண் சீரியலைவிட்டு வெளியே செல்கிறாரா என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in