‘மாநாடு’ பாடல் பின்னணியில் மனதையள்ளும் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி!

‘மாநாடு’ பாடல் பின்னணியில் மனதையள்ளும் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களுள் ஒன்றான 'ராஜா ராணி’ சீஸன் 1-ல் நடித்தன் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் ‘ராஜா ராணி’ இரண்டாவது சீஸனிலும் ஆல்யா நடித்தார். அதேநேரம், சஞ்சீவ் விஜய் டிவியில் ‘காற்றின் மொழி’ சீரியலில் நடித்தார். தற்போது சன் டிவியின் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.

ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு ஏற்கெனவே ‘ஐலா’ என்ற அழகான குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஆல்யா இரண்டாம் முறை கர்ப்பமானார். இதனால், தான் நடித்து வந்த ‘ராஜா ராணி’ இரண்டாவது சீஸனிலிருந்து விலகினார். சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தையை ஆல்யா பெற்றெடுத்துள்ளார்.

இதனிடையே ஆல்யா-சஞ்சீவ் ஜோடி யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் யூடியூப் சேனலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் வீடியோக்களுக்கென்றே ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்தபோது, சஞ்சீவுடன் எடுத்த வீடியோவை ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் ஆல்யா மானசாவும் சஞ்சீவும் ‘மாநாடு’ படத்தின் ‘மெஹர்சைலா’ பாடலின் பின்னணியில் அழகான போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அதில் இஸ்லாமிய திருமணங்களில் அணிவது போல் இருவரும் உடைகளை அணிந்துள்ளனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.