ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு ஆண் குழந்தை: பெயர் என்ன தெரியுமா?

ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு ஆண் குழந்தை: பெயர் என்ன தெரியுமா?

விஜய் டிவியின் 'ராஜா ராணி' சீரியல் மூலமாகப் பிரபலமானவர் ஆல்யா. இவருக்கும் இதே சீரியலில் நடித்த சஞ்சீவுக்கு காதல் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஆல்யாவுக்கு இப்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

“இந்த மாத இறுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் குழந்தையை எதிர்பார்க்கிறோம்” என நேற்றுகூட ஆல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். இந்த நிலையில், இன்று ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் தாயும் சேயும் நலம், குழந்தைக்கு ‘அர்ஷ்’ (Arsh) என பெயர் வைத்திருப்பதாக சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, ஆல்யாவின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 'ராஜா ராணி' சீரியலும் ஒன்று. முதல் சீஸனின்போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலின் இரண்டாவது சீஸனில் ஆல்யா மற்றும் சித்தார்த் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த சீரியல் ஆரம்பிக்கும்போது ஆல்தாவுக்கு அய்லா குழந்தை பிறந்து இருந்த சமயம். பிரசவத்தால் உடல் எடை அதிகரித்து இருந்தவர் இந்த சீரியலுக்காக குறைந்த காலத்திலேயே மருத்துவரின் ஆலோசனைப்படியும் பயிற்சியாளர் வழிகாட்டுதலின்படியும் உடல் எடையைக் குறைத்து 'ராஜா ராணி' சீரியலின் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில் ஆல்யா மீண்டும் கர்ப்பமானார். எனினும், கர்ப்பமாகி ஒன்பதாவது மாதம் வரைக்குமே சீரியலில் நடித்து வந்தார். அதன்பின்னர் அவர் சீரியலை விட்டு தற்போது விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக ரியா என்பவர் புதிதாக உள்ளே வந்திருக்கிறார். பிரசவத்திற்கு பின் சிறிது காலத்தில் மீண்டும் ஆல்யாவே வந்து விடுவார் என முன்பு செய்திகள் வெளியானது.

இப்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆல்யாவின் ரசிகர் ஒருவர், “மீண்டும் ‘ராஜா ராணி' சீரியலில் நீங்கள் வருவீர்களா? உங்களை மிஸ் செய்கிறோம்” எனக் கேட்டதற்கு, “மீண்டும் 'ராஜா ராணி' சீரியலுக்குள் நான் வர போவதில்லை. சந்தியா கதாபாத்திரத்தில் இனி நிரந்தரமாக புது ஹீரோயின் தான் நடிக்க போகிறார்” என ஆல்யா கூறியிருந்தார்.

"பிரசவத்திற்குப் பின்பு மீண்டும் வேறு புது சீரியலில் என்ட்ரி கொடுப்பேன்" என்றும் ஆல்யா தெரிவித்து இருப்பதால் ரசிகர்கள் அவரது ரீ-என்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in