சின்னத்திரையில் ரீ என்ட்ரியாகும் ஆல்யா!

சின்னத்திரையில் ரீ என்ட்ரியாகும் ஆல்யா!

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சீரியலுக்கு திரும்ப வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஆல்யா மானசா. இந்த சீரியலின் முதல் சீசனில் நடித்த சஞ்சீவிற்கும், இவருக்கும் காதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு கடந்த 2019-ல் ஆல்யா- சஞ்சீவ் தம்பதிக்கு அய்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஆறு மாதத்திலேயே மீண்டும் 'ராஜா ராணி-2' சீரியலுக்கு நடிக்க வந்தார்.

ஆனால், இப்போது அவருக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்து இருப்பதால் சீரியலில் இருந்து ஆல்யா விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்பவர் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறப்புக்கு சிறிது காலம் சீரியலுக்கு பிரேக் என்று அறிவித்தார் ஆல்யா. மேலும், 'ராஜா ராணி' சீரியலில் இனி ரியாவே அந்த கதாபாத்திரத்தை தொடர்வார் எனவும் கூறினார்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களிடையே தனது இன்ஸ்டா பக்கத்தில் கலந்துரையாடி இருக்கிறார் ஆல்யா. அதில் ஒருவர் எப்போது சீரியல்களில் கம்பேக் கொடுக்க போகிறீர்கள் என கேட்டிருந்தார். அதற்கு ஆல்யா, " ரொம்ப சீக்கிரமாக அதாவது இன்னும் ஒரு மாதத்திலேயே திரும்ப வருகிறேன்" என பதில் கொடுத்து இருக்கிறார். 'ரியா தான் இனி சந்தியா' என்று சொல்லி இருந்தாலும் ஆல்யா திரும்ப வர இருக்கிறார் என சொன்னதும் அதே 'ராஜா ராணி' சீரியலுக்கா அல்லது புதிய சீரியலா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ஆல்யாவின் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு மதிப்பெண்கள் குறித்து ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். மேலும் கல்லூரி படிப்பு குறித்தும் அவர்கள் கேட்ட கேள்விக்கு, " 17 அரியர்கள் காலேஜில் வைத்து டிஸ்கன்டியூ பண்ணி விட்டேன். ஆனால், அது குறித்து இன்று யாருமே கவலைப்படவில்லை. ஏனென்றால், உங்களது விருப்பமும், வேலையும் நாளை என்ன வேண்டுமானதாகவும் இருக்கலாம்" என கூறியுள்ளார்.

இது தவிர சில ஸ்கின், ஹேர் டிப்ஸ் மற்றும் நடனம் மீதான தனது காதலையும் ஆல்யா பகிர்ந்துள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் ஆல்யா சீரியலில் திரும்ப நடிக்க வருகிறேன் என கூறி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.