`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் `முல்லை'யாக வருகிறார் ஆல்யா?
ஆல்யா மானசா

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் `முல்லை'யாக வருகிறார் ஆல்யா?

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ஆல்யா மானசா நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிஆர்பியிலும் முதல் 10 இடத்திற்குள் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இருக்கிறது. மளிகை கடை நடத்தி வரும் சத்தியமூர்த்தி, மனைவி தனம் அவர்களது குடும்பம் என குடும்ப கதையாக நகரும் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். இந்த கதாபாத்திரம் விஜே சித்ராவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அவர் தற்கொலை செய்து கொண்டதால் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது காவ்யா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க காவ்யா தடுமாறினாலும் போகப்போக இந்த கதாபாத்திரத்தில் தன்னை நன்றாகவே பொருத்தி கொண்டார்.

காவ்யா
காவ்யா

இதற்கிடையில் காவ்யா மாற்றம் செய்யப்படுகிறார் என பலமுறை தகவல் வந்தாலும் சீரியல் தரப்பும் காவ்யா தரப்பும் அதை மறுத்து வந்தது. அந்த வகையில் இப்போது ஆல்யா மானசா காவ்யாவிற்கு பதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காவ்யா சினிமா வாய்ப்புகளுக்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் அதே சமயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆல்யா தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடனான உரையாடலில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்து இருந்தார்.

அதில் ஒருவர் எப்போது சீரியல் பக்கம் வருவீர்கள் என்று ஒருவர் கேட்டபோது ஆல்யா சீக்கிரமாகவே இன்னும் ஒரு மாதத்தில் திரும்ப சீரியல் பக்கம் வருகிறேன் என கூறியிருந்தார். 'ராஜா ராணி' சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மீண்டும் கர்ப்பம் ஆனதால் அந்த சீரியலில் இருந்து விலகினார். இப்போது அவருக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

குழந்தைக்காக குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் ஆல்யா, சீக்கிரமாகவே சீரியல் பக்கம் அதாவது இன்னும் ஒரு மாதத்திலேயே சீரியலுக்கு திரும்ப வந்து விடுவேன் என சொல்லியிருந்தார். அவரது ரீஎன்ட்ரி மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் இருக்குமா அல்லது வேறு புது சீரியலில் நாயகியாக வருவாரா என்பது விரைவில் தெரியவரும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.