‘ஆட்டிசம்’ பாதிப்புடையவராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

‘ஆட்டிசம்’ பாதிப்புடையவராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

புதுப்படத் தொடக்க விழா
திரைப்பட பூஜை
திரைப்பட பூஜை

இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இத்திரைப்படத்தில், ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறார். ‘புறவுலகச் சிந்தனைக் குறைபாடு’ என்று அழைக்கப்படும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற புரிதலில்லாமல், தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வார்கள்.

இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை மையமாகக்கொண்டு நடக்கும் ஒரு பிரச்சனையைப் பற்றி, விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக அர்ஜுன் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். தனித்துவமான, சவாலான கதாபாத்திரங்களைத் தேடித்தேடித் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவமளிக்கும் கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் இத்திரைப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில், இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.