வினுஷா
வினுஷா

பிக் பாஸ்7: நிக்சன் சொன்னது எல்லாமே பொய்... வினுஷா காட்டம்!

பிக் பாஸ் நிகழ்சிக்குள் நிக்சன் சொன்னது எல்லாமே பொய் என நடிகை வினுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ்7 தமிழ் நிகழ்ச்சியில் நடிகை வினுஷாவைப் பற்றி நிக்சன் ஐஷூவிடம் பாடி ஷேமிங் செய்து சொன்ன விஷயம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. பெண்களுக்கு நிக்சனால்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறி அவரை பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறது.

மேலும், வினுஷாவைப் பற்றி நிக்சன் சொன்ன அந்த பாடி ஷேமிங் கமென்ட்டும் பிக் பாஸ் குறும்படமாக போட்டுக் காண்பித்ததும் சர்ச்சை இன்னும் பெரிதானது. தற்போது இதுகுறித்து வினுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில், ‘நான் இப்போது பிக் பாஸ் இல்லத்திற்குள் இல்லாமல் போகலாம். ஆனால், எனக்காக நான் நிற்க வேண்டும். பிக் பாஸ் இல்லத்திற்குள் எனக்கும் நிக்சனுக்கும் ஆரம்பத்தில் நல்ல உறவு இருந்தது. அவனை என் தம்பி போல நினைத்தேன். அதை வைத்தே அவன் என்னை கேலி செய்வான். ஆரம்பத்தில் அது நல்ல விதமாகவும் விளையாட்டாகவும் இருந்ததால் அதை விட்டுவிட்டேன்.

ஆனால், அது ஒருக்கட்டத்தில் எல்லை மீற இதை காரணமாக சொல்லியே நான் நாமினேட் செய்தேன். அதன் பிறகு நிக்சன் என்னிடம் மன்னிப்புக் கேட்டான். ஆனால், அது கேலிக்கானது என்றுதான் நினைத்தேனே தவிர, இப்படி என்னை பாடி ஷேமிங் செய்தது எனக்குத் தெரியாது.

வினுஷா
வினுஷா

நிக்சன் என்னைப் பற்றி இப்படி பேசியது எனக்குத் தெரியும் என்று சொல்கிறார். அது முற்றிலும் பொய். எனக்கு இந்த விஷயம் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பின்புதான் தெரியும். நிக்சன் இப்போது மன்னிப்புக் கேட்டாலும் அது அவனை நல்லவனாக்கி விடாது. பிக் பாஸ் இல்லத்திற்குள் உரிமைக்குரல் எழுப்பிய பெண்கள் இப்போது எங்கே போனார்கள்? எனக்காக நின்ற விசித்ரா மேம்க்கு நன்றி. கண்டிப்பாக, இந்த வாரம் இது குறித்து கமல் சார் பேசுவார் என நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in