மண்ணை விட்டு மறைந்த கணவர்...உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன 'நாதஸ்வரம்' நடிகை!

அரவிந்த், ஸ்ருதி
அரவிந்த், ஸ்ருதி

மறைந்த தன் கணவருக்கு 'நாதஸ்வரம்' சீரியல் நடிகை ஸ்ருதி உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'நாதஸ்வரம்', 'பாரதிகண்ணம்மா' போன்ற சீரியல்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கும் அரவிந்த் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில், முப்பது வயதான அவரது கணவர் அரவிந்த் ஆகஸ்ட் மாதத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு தனது கணவரின் ஆன்மா தன்னைப் பாதுகாப்பதாக கூறிவரும் ஸ்ருதி கணவருடனான வீடியோக்கள் புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ஸ்ருதி.

தன் கணவருக்காக முன்பு பாடியுள்ள ஒரு பாடலைப் பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது: இந்த பாடல் நம்முடன் இப்படி தொடர்பாகும் என்று நான் நினைக்கவே இல்லை. உன்னுடன் நான் வாழ்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் எப்பொழுதும் என்னுடன் இருக்கும். வாழ்க்கை மிகவும் குறுகியது.

அதில், நாம் முடிந்தளவு பாசிட்டிவான எண்ணங்களையும், நல்ல செய்திகளையும் மட்டுமே செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். நீ இப்பொழுதும் அன்போடு உன் பிரார்த்தனைகளால் என்னை வழிநடத்துவாய் என நம்புகிறேன். லவ் யூ! என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி. கலங்கடிக்கும் இவரது பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in