ரச்சிதாவுடன் விவாகரத்தா? - பதில் சொல்கிறார் தினேஷ்

தினேஷ் - ரச்சிதா
தினேஷ் - ரச்சிதா

சின்னத்திரை நடிகை ரச்சிதா - தினேஷ் ஜோடி திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக தகவல் வந்துள்ள நிலையில் இது பற்றி தினேஷ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. பிறகு ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானர். ‘நாம் இருவர் நமக்கிருவர்’ தொடர் முடித்து தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் தினேஷூக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில், தற்போது கடந்த ஒரு வருடமாக இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து ரச்சிதா- தினேஷ் இருவருமே அமைதி காத்து வந்த நிலையில், இது பற்றி தினேஷ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

அதில் அவர், “எல்லோர் வீட்டிலும் கணவன், மனைவிக்குள்ளாக சண்டை இருப்பது போன்று தான் எங்களுக்குள்ளும். சிலர் சீக்கிரம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலருக்கு அது நேரம் எடுக்கும். எங்களுக்குள்ளும் அது போலத்தான். சிறிது காலம் பிரிந்து இருக்கிறோம். ஆனால், இப்போது வரை நானோ, ரச்சிதாவோ சட்டரீதியாக பிரியலாம் என்று நினைத்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது மட்டும் உறுதி.

விரைவில் காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அவர் என்னை விட தைரியசாலி. எனவே, ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்கிறார், விவாகரத்து வாங்கிவிட்டார் என லைக்ஸ், வியூவ்ஸ்க்காக பரவும் தவறான செய்திகளை கண்டு கொள்ள மாட்டார். நானும் அதை புறந்தள்ளி விடுவேன். இப்போதைக்கு இருவரும் வேலையில் கவனமாக இருக்கிறோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in