`நான் சந்தோஷமாக இருக்கிறேன்; என் தோழி மன அழுத்தத்தில் இருக்கிறாள்'- நடிகை நக்‌ஷத்ரா விளக்கம்!

`நான் சந்தோஷமாக இருக்கிறேன்; என் தோழி மன அழுத்தத்தில் இருக்கிறாள்'- நடிகை நக்‌ஷத்ரா விளக்கம்!
நடிகை நக்‌ஷத்ரா

விஜே சித்ரா போல திருமண வாழ்க்கையில் தனது வாழ்க்கையும் பாதிக்கப்படும் என தனது தோழியும் நடிகையுமான ஸ்ரீநிதி பேசியதற்கு நடிகை நக்‌ஷத்ரா தற்போது பதிலளித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் பிரபலமானவர்கள் நடிகை நக்‌ஷத்ராவும், அவரது தோழி ஸ்ரீநிதியும். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் பேசினார். அப்போது அவர், "நானும் நக்‌ஷத்ராவும் நெருங்கிய தோழிகள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது அவள் வேறு ஒருவரை காதலித்து வருகிறாள். ஒரே மாதத்தில் அவர்கள் பேசி பழகி நிச்சயதார்த்தம் வரை வந்து விட்டார்கள். ஆனால், மாப்பிளை வீட்டில் உள்ளவர்கள் சரியில்லை. அவளது பணத்தை உபயோகிக்கிறார்கள். அவளை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இதை நான் இப்போது சொல்வதற்கு காரணம், விஜே சித்ரா தவறான ஒருவரை திருமணம் செய்து தற்கொலை செய்து கொண்டதுபோல இவளது வாழ்க்கையும் ஆகிவிடக்கூடாது. மாப்பிளை வீட்டில் அவளை விடவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்’ என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.

நடிகை நக்‌ஷத்ரா
நடிகை நக்‌ஷத்ரா

இது குறித்து நடிகை நக்‌ஷத்ரா தற்போது விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய அவர், "கடந்த சில நாட்களாக நான் எதோ பிரச்சினையில் இருப்பதாக என்னை பற்றி செய்திகள் பரவி வருகின்றன. மேலும், என்னை யாரோ பலவந்தப்படுத்தி பிடித்து வைத்துள்ளார்கள் எனவும், நான் காதலிப்பவர்களது குடும்பம் நான் எங்கேயோ போய் விடுவேன் என இறுக்கி பிடித்து வைத்துள்ளார்கள் என்றும் செய்தி வெளியானது. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன். தினமும் படப்பிடிப்புக்கு போய் வந்து கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.

ஸ்ரீநிதி பேசியது பற்றி அன்றே நான் வீடியோ போட்டிருக்க வேண்டும். ஆனால், அவளை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களுக்கு நன்றாக தெரியும். அவளது கடந்த சில பதிவுகள் மூலம் அவள் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று. அதனால், நீங்கள் இதை பெரிதுபடுத்த மாட்டீர்கள் என்று நினைத்தேன். என் மேல் இருக்கும் அக்கறையில்தான் நீங்கள் தொடர்ந்து இதை பற்றி கேட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால், என் கூட இருப்பவர்களுக்கும் எனக்கும் நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தது. நான் சந்தோஷமாக, பத்திரமாகதான் இருக்கிறேன். அதனால் நீங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம். அவளுக்கு எதை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டும், பொதுவில் பேச வேண்டும் என்பது தெரியாது. அதனால், இந்த செய்தியை விட்டு விடுங்கள். நான் சந்தோஷமாகவே இருக்கிறேன்” என பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in