என்னைப் பற்றி வதந்தி பரப்பாதீர்கள்... டென்ஷனான `பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் பட்டாளம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் பட்டாளம்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' சீரியலிலும் மீனா கதாபாத்திரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஹேமா பதில் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த சீரியலுக்கும் இதன் கதாபாத்திரங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அண்ணன்- தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு இந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் இது முடிவடைய இருக்கும் நிலையில் இதன் இரண்டாம் பாகம் அடுத்து ஒளிபரப்பாகிறது என விஜய் டிவி புரோமோ வெளியிட்டு வருகிறது.

ஹேமாவின் பதிவு
ஹேமாவின் பதிவு

இதன் இரண்டாம் பாகத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலினே நடித்திருக்க, தனமாக நிரோஷா நடிக்கிறார். முதல் பாகத்தில் அண்ணன்- தம்பி பாசம் என்றால் இரண்டாம் பாகத்தில் அப்பா-மகன் பாசத்தை மையமாக கொண்டு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதை புரோமோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதில் மூர்த்திக்கு மூன்று மகன்கள் இருப்பதாக காட்டப்படுகிறது. மேலும், வரும் மருமகள்கள் மூர்த்தியின் பேச்சை மீறமாட்டார்கள் என்பதுபோல புரோமோவும் வெளியிட்டு வருகிறார்கள்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்

இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியானதில் இருந்து மூர்த்தி, தனம், அவர்களது மூன்று மகன்களை சுற்றி மட்டுமே புரோமோ வருகிறது. மற்ற கதாபாத்திரங்கள் குறித்து எதுவும் இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் முதல் பாகத்தில் மீனாவாக கலக்கிய ஹேமாவே அந்த கதாபாத்திரத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இது குறித்து ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ''பாண்டியன் ஸ்டோர்ஸ்2' சீரியலில் என் கதாபாத்திரம் பற்றி வதந்தி பரப்பாதீர்கள். இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. நடந்தால் நானே அறிவிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in