எடையைக் குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி: 21 வயதில் பறிபோன நடிகையின் உயிர்!


எடையைக் குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி: 21 வயதில் பறிபோன நடிகையின் உயிர்!

உடல் எடையைக் குறைக்க தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்தனாராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்தனா ராஜ் (21). ‘கீதா’, ‘தொராசனி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் புகழ் பெற்றவர். இவர் உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ‘ஃபேட் ஃப்ரீ’ என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சேத்தனா ராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

நடிகை சேத்தனா ராஜ் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் விவரம் குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும், அவரது நண்பர்களுடன் அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவரின் அலட்சியமே தங்கள் மகளின் மரணத்திற்குக் காரணம் என்று சேத்தனா ராஜூன் பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேத்தனாவின் மரணத்திற்கு கன்னட தொலைக்காட்சி நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 21 வயதில் சேத்தனா திடீரென மரணம் அடைந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in