குழந்தைகளுடன் ஆல்யா மானசா
குழந்தைகளுடன் ஆல்யா மானசா

குழந்தைகளுடன் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா!

சின்னத்திரை பிரபலம் ஆல்யா மானசா தனது குழந்தைகளுடன் ஜாலியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களைத் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர் ஆல்யா மானசா. இவருக்கும் அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவுக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ‘ராஜா ராணி2’ சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஆல்யா இரண்டாவது குழந்தைக்காக சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். தற்போது, சன் டிவியில் ‘கயல்’ என்ற சீரியலில் கம்பேக் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆல்யாவின் குழந்தை அய்லா செய்யும் சேட்டைகளுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அம்மா போலவே நடனத்தில் அசத்தக்கூடிய அய்லாவின் க்யூட்டான டான்ஸ் வீடியோக்கள், மழலை மொழியில் அவர் பேசும் வீடியோக்களையும் தவறாமல் பதிவிடுவார் ஆல்யா.

இந்த நிலையில், தனது குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆல்யா. குட்டி அய்லாவுக்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸை கொடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in