பிக்பாஸ்; நல்லா காதல் கன்டென்ட் கொடுத்து ஷோவை ஓட்டுறீயே ரவீனா... பிரதீப்பின் ஏடாகூடம்!

பிக் பாஸ்7
பிக் பாஸ்7

ரவீனாவின் காதல் குறித்து பிரதீப், விசித்ரா கேள்வி எழுப்பியுள்ளது பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அனன்யா, பவா செல்லதுரை வெளியேறியுள்ளதால் இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடி, பாடகர், மாடல், நடிகர்கள், பஞ்சாயத்து கூட்டுபவர்கள் என என்டர்டெயின்மென்ட்டுக்கு குறைவில்லாமல் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். அந்த வகையில், இந்த சீசனில் காதல் ஜோடி என வெளியில் கிசுகிசுக்கப்பட்ட நடனக்கலைஞர்களான ரவீனா-மணிச்சந்திரா ஜோடி உள்ளே நுழைந்துள்ளது.

ரவீனா, மணிச்சந்திரா
ரவீனா, மணிச்சந்திரா

இதுதான் தற்போது போட்டியாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே, ‘கப்பு முக்கியம் பிகிலு’ மோடில் எல்லோரிடமும் சண்டைக்கோழியாக வலம் வரும் பிரதீப்பும், எல்லோர் பர்சனல் விஷயத்திலும் தலையிடும் விசித்ராவும் ரவீனாவின் காதல் குறித்து எழுப்பியுள்ள கேள்வி பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசித்ரா ரவீனாவிடம், ‘நீயும் மணியும் லவ்வர்ஸ் தானே?’ எனக் கேட்கிறார். அதை மறுத்துள்ள ரவீனா, ‘நாங்க அப்படி சொல்லல நல்ல நண்பர்கள் தான் என அவர் சொல்ல, பார்த்தால் அப்படி தெரியலையே என பேசியுள்ளார். நடிகர் பிரதீப்பும், ’ரவீனா நல்லா காதல் கன்டென்ட் கொடுத்து ஷோவை ஓட்டுறீயே’ என ஏடாகூடமாக பேசி அதிர வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in