‘கயல்’ சீரியலை விட்டு வெளியேறும் சஞ்சீவ்?

‘கயல்’ சீரியலை விட்டு வெளியேறும் சஞ்சீவ்?

‘கயல்’ சீரியலை விட்டு நடிகர் சஞ்சீவ் வெளியேற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தற்போது ‘கயல்’ சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியும் நடிகையுமான ஆல்யா மானசா தற்போது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்க வந்திருக்கிறார்.

சன் டிவியில் ‘இனியா’ என்ற சீரியல் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் சஞ்சீவ் ஆல்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் ‘கயல்’ சீரியலை விட்டு வெளியேற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்தான அதிகாரபூர்வமாக சஞ்சீவ் தரப்போ அல்லது சீரியல் தரப்போ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆல்யா, சஞ்சீவ் இருவரும் ‘ராஜா ராணி’ சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இந்த சீரியலுக்குப் பிறகு ‘இனியா’ சீரியலில் சஞ்சீவ் நடித்தால் அது அவர்கள் இணையும் இரண்டாவது சீரியலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in