
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேற்றத்தைத் தொடர்ந்து நிக்சனை கமல்ஹாசன் கண்டிக்க வேண்டும் என்ற குரல் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இதனை கமல்ஹாசன் டீலில் விட அதேபோன்ற விஷயத்தை நாகார்ஜுனா எப்படிக் கையாண்டார் என்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தை முன்வைத்து ரெட் கார்டு கொடுத்து அவர் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து நிக்சன் பிக் பாஸ் இல்லத்தில் வினுஷாவை உருவ கேலி செய்தது, ஐஷூவிடம் அத்துமீறி நடந்தது போன்ற விஷயங்களை வெளியில் பார்வையாளர்கள் கடுமையாகத் திட்டினர். மேலும் பிரதீப் போலவே நிக்சனையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் எனவும் சொல்லி வந்தனர்.
வினுஷாவைப் பற்றி நிக்சன் செய்த உருவகேலியையும் கமல்ஹாசன் கேட்க வேண்டும் எனவும் வினுஷாவும் பதிவிட்டிருந்தார். ஆனால், பிரதீப் விஷயத்திற்கு விளக்கம் கொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்ட கமல் வினுஷா விஷயத்தில் நிக்சன் நடந்து கொண்டது பற்றி கேள்வி எழுப்பவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால், இதேபோன்ற ஒரு விஷயம் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்க அதை அங்கு நாகார்ஜுனா எப்படி டீல் செய்திருக்கிறார் என்ற வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தெலுங்கு பிக் பாஸில் ஆண் போட்டியாளர் ஒருவர் பெண் போட்டியாளரை உருவ கேலி செய்திருக்கிறார்.
இதை நாகார்ஜுனா சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட ஆண் போட்டியாளருக்கு செம்ம டோஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரைப் பார்த்து கமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். தெலுங்கு பிக் பாஸை பொறுத்தவரை நாகார்ஜுனா ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவாராம்.
அதை வைத்து தான் அவர் வார இறுதியில் என்னென்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்வாராம். ஆனால் கமல் அப்படியெல்லாம் செய்யாமல் பிக் பாஸ் குழுவினர் சொல்லும் கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் தான் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!