பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புது ஐடியா கொடுத்த மன்சூர் அலிகான்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புது ஐடியா கொடுத்த மன்சூர் அலிகான்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மன்சூர் அலிகான் புது ஐடியா கொடுத்துள்ளார்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக சாந்தி மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஜிபி முத்து அவராகவே வெளியாகினார். இந்த வாரம் அசல் கோளாறு வெளியேறி உள்ளார். மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகர் மன்சூர் அலிகான் வருவதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருவதால் 6 மாதங்களுக்கு தன்னிடம் தேதி இல்லை, என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியே ஒருவேளை தேதிகளை சரிசெய்து பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க தான் சம்மதித்தாலும், தான் பிக் பாஸாக இருந்து போட்டியை நடத்துவேன், என்று சொல்லியதோடு, 100 ஏக்கர் பொட்டல் நிலத்தை என்னிடம் கொடுங்கள், போட்டியாளர்களை வைத்து அந்த இடத்தை விவசாய நிலமாக மாற்றி, அதில் விளைச்சல் செய்து காட்டுவது தான் போட்டி. இதில் வெற்றி பெறுபவர்களை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சியாக தான் நான் பிக் பாஸ் போட்டியை நடத்துவேன், என்றும் கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்

மேலும், ‘நான் சொல்லும் யோசனைப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தால் இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். இங்கு வெற்றியாளர், தோல்வியடைந்தவர் என்று இருக்காது. அனைவருக்கும் விருது வழங்கப்படும். நம்மாழ்வார் உள்ளிட்ட விவசாயத்திற்காக பாடுபட்டவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும். நான் குதிரை மீது வந்து தான் போட்டியில் பங்கேற்பேன். எலிமினேஷன் ஆகிறவர்கள் எருமை மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மாடுகளை வளர்க்க வேண்டும், யானைகளை கட்டி போரடிக்க வேண்டும். இப்படி பல வகையான போட்டிகளை நடத்துவேன்.


இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.

மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு,  இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.” என்றார்.

“இது என் யோசனை என்பதால் இதை நான் தான் நடத்த வேண்டும் என்பதில்லை, இதை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இப்படி நடந்தால் நல்லா இருக்கும் என்று சொல்கிறேன். அப்படி இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்தத் தொலைக்காட்சி முன்வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்.

கதையின் நாயகனாகவும், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்கள் என்று நான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்காக தேதிகளை ஒதுக்க தயாராகவே இருக்கிறேன். காரணம், இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் இன்றி, டிவி முன்பு உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் பயன் தரும்” என்று பதில் கூறினார் மன்சூர் அலிகான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in