உடல் எடையைக் குறைக்க ஒரு புத்தகம்!

உடல் எடையைக் குறைக்க ஒரு புத்தகம்!

பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியம் எழுதிய ’ஸ்டாப் வெய்ட்டிங்’ எனும் புத்தகத்தை, புகழ்பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியிடுகிறது.

தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியம் புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வருபவர். ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக அவர் உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். பலவிதமான டயட், ஜிம்மில் தீவிரமான வொர்க்கவுட்ஸ் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை ரம்யாவை ஒரு தசாப்தமாக பாதித்து இருந்தது. இதற்கிடையில், ரம்யா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். ஆனால், இந்த புகழ் வெளிச்சமும் அவரை மீண்டும் இந்த கேலிக்குள் தள்ளியது. இதெல்லாம் தன் வாழ்க்கை மீது ரம்யா கட்டுப்பாடு எடுக்கும் வரைதான்.

இன்று ரம்யா முன்னெப்போதும் விடவும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதை எப்படி அவர் சாதித்தார் என்பதைத்தான் Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார். இது அவரது முதல் புத்தகமாகும்.

தன் சொந்த அனுபவங்கள், செய்த தவறுகள், வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் ஃபிட்னெஸ் பயணத்தில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை கவனித்து ரம்யா பகிர்ந்திருக்கும் இந்த விஷயங்கள் ஃபிட்னெசில் ஆர்வம் காட்டி தொடங்க விரும்புபவர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

இப்புத்தகம் குறித்து ட்வீட் செய்திருக்கும் நடிகை சமந்தா ரூத் பிரபு, ‘என்னுடைய அன்பான தோழி ரம்யா புத்தகம் எழுதி இருக்கிறார். பென்குயின் இந்தியா இந்த புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறது. இந்த ஃபிட்னெஸ் சூப்பர் ஸ்டார் ரம்யா உடற்பயிற்சியில் தன் மொத்த அனுபவத்தையும் இதில் தொகுத்துள்ளார். வாழ்க்கைப் பாடம், தவறுகள் மற்றும் கற்றுக்கொண்ட விஷயங்கள் மூலம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர் நடத்தி வருகிறார். எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது’ என வாழ்த்தியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in