வைரல் வீடியோ... ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே செல்ல முடியும்!

வைரல் வீடியோ... ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே செல்ல முடியும்!

இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பச்சை விளக்குகள் எரியும் என்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வைப்பதற்காக போக்குவரத்து போலீஸார் அதீத முன்னெடுப்புகளை செய்ய வேண்டியுள்ளது. நாள்தோறும் வெயில், மழை என பாராமல் அவர்கள் விதிகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வளர்ந்த அல்லது வளரும் நாடுகளில் அதிவேகம், அஜாக்கிரதையாக முந்திச் செல்வது, ஹெல்மெட் அணியாதது போன்ற அடிக்கடி ஏற்படும் விதிமீறல்களால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும். இதை சமாளிக்கும் வகையில், ஹெல்மெட் பயன்படுத்துவதை வலியுறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் விதிகளை கடுமையாக்குகின்றனர்.

இந்நிலையில் ஹெல்மெட் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான டிராஃபிக் லைட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சிக்னலில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே விளக்கு பச்சை நிறமாக மாறும். அப்படி இல்லை எனில், அருகிலுள்ள திரையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் காட்டப்படுவார்கள்.

பாதுகாப்பான சாலை சூழலை மேம்படுத்தும் வகையில், ஹெல்மெட் கண்டிப்பாக அணியுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த வீடியோ அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ அர்ஜென்டினாவைச் சேர்ந்தது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விதிமுறை இந்தியாவிற்கு மிகவும் தேவையான ஒன்று என கமெண்ட்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in