அடடே... திருமணம் முடிந்த 2 மணி நேரத்தில் ஆல்பம்: அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

மணமக்கள் கையில் அவர்களது திருமண ஆல்பம்
மணமக்கள் கையில் அவர்களது திருமண ஆல்பம்

திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில்  செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ)  தொழில்நுட்பத்தின் மூலம் திருமணப் புகைப்பட ஆல்பம் மற்றும் வீடியோவை மணமக்கள் கையில் கொடுத்து அசத்தியுள்ளனர். 

சமீப காலமாக ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல செயல்களை எளிதில் மனிதர்களை விட வேகமாக செய்து அசத்தி வருகிறது. விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது முதல் சாதாரண விடுப்பு கடிதம் வரை ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றனர்.

ஏ.ஐ தொழில்நுட்பம் தற்போது திருமணத்திற்கு எடுக்கப்படும் புகைப்படங்களை க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தால் உடனடியாக டவுன்லோடு செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகனசுந்தரம் மற்றும் பிரீத்தி இருவருக்கும் நேற்று  திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு புதிய முயற்சிகளை செய்தனர்.

அதிலும் குறிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்னிவல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மேடையில் மணமகன், மணமகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உடனடியாக க்யூ ஆர் ஸ்கேனர் முறையில் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. 

மேலும் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனடியாக மேடையில் அமர்ந்திருந்த திருமண தம்பதியினரிடம் பரிசாக வழங்கப்பட்டது. திருமணம் நடந்து முடிந்த இரண்டு மணி நேரங்களில் திருமண ஆல்பம் கொடுக்கப்பட்டதால் புதுமண தம்பதியினர் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், "திருமணம் நடந்து முடிந்தவுடன் ஆல்பத்தை உடனடியாக டெலிவரி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. திருமணத்தின்போது மண மேடையில் பல வேலைகள் இருந்தாலும் தன் முகம் இன்று எவ்வாறு உள்ளது. தாலி கட்டிய நொடி எனது முகம் எப்படி இருந்தது என்பது மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மணமேடையில் திருமண ஆல்பம் மற்றும் வீடியோ தயார் செய்து உடனடியாக அதனை வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

குறிப்பாக தாலி கட்டிய தருணத்தை வீடியோவாக திரையில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பங்கள் இதுபோன்று பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது" என்றனர்.

திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் மணமக்கள் மேடையில் இருக்கும் போதே அவர்களது புகைப்பட ஆல்பமும் வீடியோவும் தயாராகி இருப்பது அந்த திருமணத்திற்கு வந்தவர்களையும் கேள்விப்பட்டவர்களையும் பெரும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in