
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு வசதியாக அங்கு ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 4791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. பரந்தூர் புதிய விமான நிலையம் சென்னை நகரில் இருந்து சுமார் 67 கி.மீட்டர் தூரத்தில் வருகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் ரயில் பாதையில் திரிசூலம் ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.
இதைத்தொடர்ந்து ரயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமையும்போது ரயில் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவேண்டும்.
இதற்கான ஆய்வு பணியை செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில்வே பாதையில் விரைவில் மேற்கொள்ள ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. ரயில்வே வாரியம் ஏற்கெனவே மாநிலத்தில் 390 கி.மீட்டர் தூரத்துக்கு 7 வழித்தடங்களில் புதிய ரயில்வே பாதை அமைக்க அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!