காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கைகோள் வரும் 17-ம் தேதி மாலை 5:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத்தாண்டில் ஜனவரி 1-ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் ‘எக்ஸ்போசாட்’ என்ற ‘எக்ஸ்-ரே போலரிமீட்டர்’ என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2 -ம் தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை ஜனவரி 6 -ம் தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கைகோள் நாளை மறுநாள் (17-ம் தேதி) மாலை 5:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 29-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி.- எப்12 ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிசெலுத்தும் என்.வி.எஸ்-01 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு தற்போது ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டதாகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
விருப்பம்போல சாப்பிடலாம், தூங்கலாம்... வேலையும் பார்க்கலாம்; ஹைதராபாத்தில் ஜாலி ஆபீஸ்!
பிரதமர் மோடியை பதவி விலக வேண்டும்... பகீர் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!
வித்தவுட்டில் பயணம்... ரூ.100 கோடி அபராதம் தீட்டிய மும்பை ரயில்வே கோட்டம்!
லிவிங் டு கெதரில் மாணவி... கல்லூரி விடுதியில் குழந்தையைப் பெற்றதால் அதிர்ச்சி!
கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்