அதிர்ச்சி... ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் ஆபாச வீடியோ! போலீஸ் அதிகாரியின் மகன்கள் சேட்டை!

ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிட்ட காவல் துறை அதிகாரியின் 2 மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பம்

உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமான வளர்ந்து வருகிறது. ஏஐ கருவிகள் மூலம் விளம்பரங்கள் உள்ளிட்ட பல நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், பலர் இந்த தொழில்நுட்பத்தை பெண்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர்.

அதாவது ஏஐ இமேஜிங் மூலம் டீப்ஃபேக் ஆபாச படங்களை உருவாக்கலாம். அதாவது ஏஐ மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்கலாம். அதாவது ஆபாச நட்சத்திரங்களின் முகத்திற்குப் பதில் யார் முகத்தை வேண்டுமானாலும் அதற்கு மேல் வைத்து வீடியோ தயாரிக்கலாம்.

உலகளவில் பரவி வரும் ஏஐ தொழில்நுட்பக் குற்றங்கள், தற்போது இந்தியாவிலும் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகாராஷ்டிராவில் சிறுமிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோ முதல் முறையாக தயாரிக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பம்

பால்கர் மாவட்டத்தில் உள்ள 19 மற்றும் 21 வயதுடைய சகோதர்கள் இருவர், பெண்கள் மற்றும் சிறுமிகள் படங்களை வைத்து ஆட்சேபனைக்குரிய இரண்டு ஆபாச வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். அத்துடன் இந்த வீடியோக்களை இருவரும் சமூக இணையதளங்களில் புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள், வீடியோ குறித்து இவர்களிடம் கேட்ட போது, அவர்களை வாலிபர்கள் இருவரும் தாக்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட வாலிபர்களின் தந்தை மும்பை காவல் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பத்தில் சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாச வீடியோ தயாரித்து வெளியிடப்பட்ட சம்பவம் பால்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in