
உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபரின் ஐபோன் வெடித்து இரண்டு துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் சிங் (47). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், தனது பேண்ட பாக்கெட்டில் ஐபோன் வைத்திருந்தார். அப்போது அவரது போன் சூடாவதை அவர் உணர்ந்திருக்கிறார். பின்னர் சில நிமிடங்களில் அதிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அவர் பையில் இருந்து எடுக்கும் முன் ஐபோன் பயங்கர ஒலியுடன் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் பிரேம்ராஜ் சிங்கின் இடது தொடை மற்றும் கட்டைவிரலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிங் கூறுகையில், " என் பாக்கெட்டிலிருந்த ஐபோன் சூடானது. இதனால் வெளியே எடுத்தேன். அது ஒரு பெரிய ஒலியுடன் வெடித்தது. அதனைத் தொடர்ந்து ஐபோன் இரண்டு துண்டுகளாக உடைந்தது," என்று அவர் கூறினார். இந்த சம்பவம் அலிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.