செயற்கை நுண்ணறிவு சுவீகரிப்பு... ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா முதலிடம்!

ஏஐ
ஏஐ

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக டெலாய்ட் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ’ஜெனரேட்டிவ் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (ஜென்ஏஐ) நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்று ’டெலாய்ட் இந்தியா’ நிறுவனம் இன்று அறித்துள்ளது. 93 சதவீத மாணவர்களும், 83 சதவீத ஊழியர்களும் ஜென்ஏஐ தொழில்நுட்பத்தில் தீவிரமாக ஈடுபடுவதன் அடிப்படையில் டெலாய்ட் நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இந்த ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே, ஜென்ஏஐ தொழில்நுட்பத்தை தாங்கள் பயன்படுத்துவது தங்களது மேலாளர்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பம்

பிராந்தியத்தில் உள்ள 13 நாடுகளில் 11,900 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ’ஆசியா - பசிபிக் பகுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ: முன்னணியில் உள்ள இளம் பணியாளர்கள் மற்றும் நிறுவனத்தினர்’ என்ற அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்புகள் இருந்தன. அடுத்த 5 ஆண்டுகளில், ஜென்ஏஐ என்பதன் தினசரி பயன்பாடு 182 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 17 சதவீத வேலை நேரத்தை ஜென்ஏஐ கணிசமாக பாதிக்கும் என்றும், இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1.1 பில்லியன் வேலை நேரம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. ”ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும், ஜென்ஏஐ பயனர்கள் வாரத்திற்கு சராசரியாக 6.3 மணிநேரம் சேமிக்கின்றனர். அதிலும் இந்திய பயனர்கள் வாரத்திற்கு சராசரியாக 7.85 மணிநேரம் அதிக நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள். இது திறன் கையகப்படுத்துதலில் அதிக கவனம் செலுத்த அனுமதிக்கிறது" என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

ஏஐ
ஏஐ

இந்த தொழில்நுட்பத்தின் சவால்களை எதிர்கொள்வதில் வேண்டிய அவசியம் குறித்தும் கணக்கெடுப்பு காட்டுகிறது. "இந்த தொழில்நுட்பங்களை செயல்திறன் ஆதாயங்களுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அடிப்படையில் வணிக மாதிரிகள் மற்றும் செயல்முறைகளை மாற்றியமைக்க வேண்டும். செயல்படுத்தும் தடைகளை கடக்க, முன்முயற்சியான ஈடுபாடு மற்றும் ஏஐ என்பதன் திறன்களைப் பற்றிய விரிவான புரிதல் தேவை" என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஜெனரேட்டிவ் ஏஐ நுட்பத்தை சுவீகரித்ததில் இந்தியா கண்டிருக்கும் மாற்றங்கள், மாணவர்களுக்கான உயர்கல்வி முதல் தொழில்துறை மாற்றங்கள் வரை வரும் ஆண்டுகளில் எதிரொலிக்கக் கூடும்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in