
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான இந்தியாவின் ககன்யான் திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் எஸ்கேப் சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளி துறையில் இந்தியாவின் இஸ்ரோ மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் சந்திரயான் 3, ஆதித்யா எல் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட உலகின் மிகவும் குறைந்த விலையிலான மங்கள்யான் விண்கலம் ஆகியவை இஸ்ரோவின் மணிமகுடத்தை அலங்கரித்து வருகிறது. இதில் மற்றுமொரு பாய்ச்சலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ககன்யான் விண்கலம் இந்த ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் விண்ணுக்கு செலுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக ககன்யானை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து பாகங்களும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டுவரப்பட்டு தற்போது அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு ககன்யான் விண்ணில் செலுத்தப்படும் என்ற நிலையில், முக்கியமாக ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த சோதனைகள் மிகுந்த கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்குள் இரண்டு முறை இது போன்ற அபார்ட் மிஷன் எனப்படும் சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகள் முழுமையாக வெற்றியடையும் பட்சத்தில், அக்டோபர் மாத இறுதியில் ககன்யான் ஆளின்றி விண்ணுக்கு செலுத்தப்படும். சோதனை முயற்சியாக அனுப்பப்படும் இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோரையும் அழைத்துச் செல்ல முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சாதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் வரிசையில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளை அடுத்து, இந்தியா 4வது நாடாக இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!