கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலம்... மீட்ட இந்திய கடற்படை!

ககன்யான் விண்கலம்
ககன்யான் விண்கலம்

கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலத்தை இந்திய கடற்படையினர் மீட்டு சென்னை துறைமுகம் கொண்டு வருகின்றனர்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV -D1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து மாதிரி விண்கலம் ஏவப்பட்டு விண்ணில் பாய்ந்தது. மாதிரி விண்கலத்தை தரையிலிருந்து 16.6கிமீ தூரம் அனுப்பி வங்கக்கடலில் இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

20 நிமிடங்கள் நீடித்த இந்த ககன்யான் சோதனையைத் தொடர்ந்து, மாதிரி விண்கலம் கடலில் விழுந்தது. அதனை மீட்ட இந்திய கடற்படை சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரவுள்ளனர். அந்த விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து தரவுகள் சேகரிக்கப்பட்டு, அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in