ராணுவ வீரர்களுடன் பேசலாம்... இமயமலையின் 15,500 அடிக்கு மேல் பிஎஸ்என்எல் டவர் அமைப்பு!

இமயமலையில் பிஎஸ்என்எல் டவர்
இமயமலையில் பிஎஸ்என்எல் டவர்

உலகிலேயே மிகவும் உயரமான இமயமலையின் சியாச்சின் பகுதியில் முதல் செல்போன் டவரை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவியுள்ளது.

சியாச்சின்
சியாச்சின்

உலகிலேயே மிகவும் உயரமான இமயமலையில் சியாச்சின் பகுதி உள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் அவ்வப்போது சண்டை போடும் இந்த பகுதியில் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் என்ற இந்திய ராணுவப் பிரிவினர் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சியாச்சின் பனிமலையில் முதல் செல்போன் டவரை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவியுள்ளது. இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் இந்த செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. "சியாச்சின் வாரியர்ஸ் பிஎஸ்என்எல்லுடன் இணைந்து, 15,500 அடிக்கு மேல் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மொபைல் மூலம் தொடர்பு கொள்ள, செய்தியை பரிமாறி கொள்ள இந்த டவர் உதவும். அக்டோபர் 6-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் பிடிஎஸ் என்ற இந்த டவர் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in