குப்பை மற்றும் காற்றிலிருந்து மின்சாரம்... காசாவை இருளில் இருந்து மீட்கும் 15 வயது சிறுவன்!

ஹுசாம் அல் - அத்தார்
ஹுசாம் அல் - அத்தார்

இஸ்ரேலின்  கடும் தாக்குதலால் இருளடைந்து கிடக்கும் காசா நகரில்  மின்சாரம் தயாரித்து ஒளி ஏற்றி  வைத்திருக்கிறான் ஒரு சிறுவன்.

சிதிலம் அடைந்து கிடக்கும் காசா நகர்
சிதிலம் அடைந்து கிடக்கும் காசா நகர்

காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்குள்ள பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில்  மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கு மக்கள் மிகவும்  அல்லல்பட்டு வருகின்றனர்.

அப்படி இருளில் மூழ்கி இருக்கும் காசா நகர மக்களின் வாழ்க்கையில்  15 வயதான  இளம் விஞ்ஞானி ஹுசாம் அல் - அத்தார்  நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்திருக்கிறார். அவரது கண்டுபிடிப்புகளின் விளைவால் 'காசாவின் நியூட்டன்' என அவரை தற்போது மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.  குப்பை உள்ளிட்ட கிடைத்த பொருள்களை எல்லாம் வைத்து மின்சாரம் தயாரித்திருக்கிறார் இந்தச் சிறுவன். 

ஹுசாம் அல் - அத்தார்
ஹுசாம் அல் - அத்தார்

மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று அங்குள்ள பொருட்களை வைத்து  காற்று மூலம் மின்சாரம் தயாரித்து அவர்களுக்கு வெளிச்சம் கிடைக்க உதவி வருகிறார் ஹுசாம்.  இதையடுத்து  இச்சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

"இருளுக்குள் இருந்த என் சகோதரர்களைப் பார்த்தேன். அவர்கள் கண்களில் பயம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் அளிக்க நினைத்தேன்" என ஹுசாம் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மொத்த காசாவையும் இருளில் மூழ்கடித்திருக்கும் வேளையில் இந்தச் சிறுவனின் முயற்சி குன்றில் இட்ட விளக்காக ஜொலிக்கிறது. இதுபோன்ற நிறைய கண்டுபிடிப்புகளை  உருவாக்கவேண்டும் என அவர் கூறியுள்ளார். சிறு வயதிலிருந்தே மிகத் திறமையானவன் எனவும், இந்த சமுதாயத்திற்கு உதவும் பல கண்டுபிடிப்புகளை அவன் நிகழ்த்துவான் எனவும் ஹுசாம் தாயார் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in