மிரண்ட எலான் மஸ்க்...30 நிமிடத்தில் 600 கி.மீ செல்லும் ஹைப்பர்லூப் வாகனம்.. சென்னை மாணவர்கள் சாதனை!

ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்துடன் ஐஐடி மாணவர்கள்
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்துடன் ஐஐடி மாணவர்கள்

மணிக்கு 1200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் வாகனத்துக்கான தொழில்நுட்பத்தை  சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்

ஒரு வெற்றிடக் குழாய் பாதை வழியாக 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடப்பதற்கான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் குழு உருவாக்கி இருக்கிறது. இத்தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால்  சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 25 நிமிடங்களுக்குள் பயணிக்கலாம்.

ஐஐடி மெட்ராஸின் மாணவர்கள் குழு படைத்துள்ள 'அவிஷ்கர் ஹைப்பர்லூப்' என்ற இந்த ஆராய்ச்சித் திட்டம் உலகம் முழுவதிலும் கவனம் பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஹைப்பர்லூப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஐஐடி மெட்ராஸ் குழு இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எடின்பரோவில் நடைபெற்ற நிகழ்வில் தங்கள் ஹைப்பர்லூப் தொழில்நுடபத்திற்காக விருதையும் வென்றது.

போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஹைப்பர்லூப், அதிக வேகத்தில் பயணிக்கும். ஆனால் அதிக ஒலிமாசு, காற்று மாசு ஏற்படுத்தாது. விமான நிலையங்கள் போல பெரிய உள்கட்டமைப்புகள் வசதிகளும்  தேவைப்படாது. ஹைப்பர்லூப் மூலம் ரயில்களுக்குத் தேவையானதைப் போன்ற வசதிகளை பயன்படுத்தி  விமானத்தின் வேகத்தை அடைய முடியும். 

வெற்றிடக் குழாய்களுக்குள் செல்லும் ஹைப்பர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கலாம். ஆச்சரியப்படும் விதமாக, இதில் எந்த கார்பனும் வெளியேற்றமும் இல்லை. பயணிகள் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.  ஐஐடி மெட்ராஸின் 'அவிஷ்கர் ஹைப்பர்லூப்' திட்டம் வெற்றிடக் குழாய்களில் சோதனை செய்யப்பட்டு அதில் வெற்றி அடைந்துள்ளது. 

இத்திட்டத்தின் மாணவர் குழுத் தலைவரான மேதா கொம்மாஜோஸ்யுலா, ஜூலை 2023 ல் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள்  இதே வேகத்தில் தொடர்ந்து வேலை செய்தால், அடுத்த 10 ஆண்டுகளில் முதல் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்க முடியும்" என்று கூறியிருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சில மாதங்களிலேயே அவர்கள் சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய, ஹைப்பர்லூப் அமைப்பு பகுதி வெற்றிட சூழல்களில் காந்த உந்துவிசையைப் பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பில் மணிக்கு 1,000 கிமீ வேகத்தை அடைய முடியும்.  ஆனால், சென்னை மாணவர்கள் உருவாக்கியுள்ள ஹைப்பர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.

ஐ.டி மெட்ராஸ் குழு தங்கள் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் தொடர்பாக ஆறு காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளது. வாகனத்தின் லெவிடேஷன், உந்துவிசை, குழாய் கட்டுமானம் மற்றும் பேட்டரி குளிரூட்டல் போன்ற அம்சங்களுக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஐஐடி மெட்ராஸ் உள்நாட்டு ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான முன்மொழிவை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சகம் ரூ.8.34 கோடி நிதியை ஐஐடி மெட்ராஸுக்கு வழங்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in