‘செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு சேதாரம் சேர்க்கும்’ எச்சரிக்கை மணியடிக்கும் ரிஷி சுனக்

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

ஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ’செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான வளர்ச்சி, மனித குலத்துக்கே எதிரானதாக அமைந்துவிடும்’ என்று எச்சரிக்கை மணியடித்திருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ்வின் போக்கினை எளிதாக்கவும், சிரமங்களை போக்கவும் செயற்கை நுண்ணறிவின் பல்துறை பயன்பாடுகள் பாராட்டு பெற்று வருகின்றன. ஆனால் செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, அதன் நோக்கம் மற்றும் அதனை உருவாக்கிய மனித குலம் என இரண்டுக்குமே பாதகம் சேர்த்துவிடும் என்ற எச்சரிக்கை குரல்களும் எழுந்து வருகின்றன.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

அக்குரல்களில் ஒருவராக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சேர்ந்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் உபயோகிப்பது, கட்டுப்பாடுடன் பயன்படுத்துவது மற்றும் விளைவுகளை கண்காணிப்பது ஆகியவற்றை ரிஷி சுனக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். செயற்கை நுண்ணறிவு கிரிமினல்கள் கையில் சிக்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்து வருகிறார்.

நவீன ஆயுதங்களை தவறான நோக்கத்தில் பயன்படுத்துவது, போலி செய்திகளை பரப்புவது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஏஐ பயன்பாடுகள் குறித்தும் அவர் எச்சரித்து வருகிறார். இதனிடையே ஏஐ பாதுகாப்பினை பரிசோதிக்கும் ’உலகின் முதல் ஏஐ பாதுகாப்பு நிறுவன’த்தை இங்கிலாந்து உருவாக்கிறது.

மனித குலத்துக்கு எதிராகுமா ஏஐ?
மனித குலத்துக்கு எதிராகுமா ஏஐ?

ஒருபுறம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் பல பில்லியன் பவுண்டுகளை செலவிடும் இங்கிலாந்து, மறுபுறம் ஏஐ வளர்ச்சிக்கு பிரேக் பிடிக்கும் நடைமுறைகளிலும் தீவிரம் காட்டுகிறது. அதன் வெளிப்பாடாகவே, ஏஐ அபரிமித வளர்ச்சி என்பது மனித குலத்துக்கே எதிரானதாக மாறிவிடும் என்று எச்சரித்திருக்கிறார் ரிஷி சுனக்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in