ஒரே விநாடியில் 150 திரைப்படங்கள் டவுன்லோட் செய்யலாம்... உலகின் அதிவேக இணைய சேவையில் அசத்தும் சீனா

அதிவேக இணையம்
அதிவேக இணையம்
Updated on
2 min read

உலகம் இதுவரை காணாத அதிவேகத்திலான இணைய சேவையை சீனா அறிமுகம் செய்திருக்கிறது. விநாடிக்கு 1.2 டெராபிட் என்றளவில் இதன் வேகம் உலகை மிரட்ட வந்திருக்கிறது.

இணைய சேவையில் உச்ச வேகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையத்தின் வேகம் அதிகரிப்பதற்கு இணையாக இதர துறைகளின் வளர்ச்சியும் பாய்ச்சல் காட்டும். உதாரணத்துக்கு, இந்தியாவில் 3ஜி என்பதிலிருந்து 4ஜி என்பதாக, இணைய சேவை அடுத்த தலைமுறைக்கு தாவியது, பல துறைகளையும் அடியோடு மாற்றியதை சொல்லலாம்.

இந்த சூழலில் இணையத்தின் வேகத்தை மென்மேலும் அதிகரிக்க உலக நாடுகள் முயன்று வருகின்றன. அவற்றில் வழக்கம்போல சீனா முன்னிலை வகிக்கிறது. நொடிக்கு 1.2 டெராபிட் என்றளவிலான இந்த வேகம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கிறது. சராசரியாக தற்போது நிலவும் அதிகபட்ச இணைய சேவையின் வேகத்தை விட இது 10 மடங்கு அதிகம் என்கிறார்கள்.

அதிவேக இணையம்
அதிவேக இணையம்

தற்போதைய நொடிக்கு 100 ஜிகாபிட்ஸ் என்றிருக்கும் வேகத்தைவிட உச்சமாக அமெரிக்காவில் அமலில் இருக்கும் நொடிக்கு 400 ஜிகாபிட்ஸ் என்ற வேகமே இதுவரை உச்ச வேகமாக இணைய சேவையில் இருந்து வந்தது. அதனை சீனா தற்போது உடைத்துள்ளது. பரிசோதனை முயற்சியாக சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் வூஹான் உள்ளிட்ட ஒருசில நகரங்களை உள்ளடக்கி, சுமார் 3000 கிமீ பரப்பில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலம் இவை சாத்தியமாகி உள்ளன.

சீனாவின் புதிய அதிவேக இணைய சேவையை எளிமையாக புரிந்துகொள்ள, அதனை முழுநீளத் திரைப்படங்களை தரவிறக்கம் செய்வதுடன் ஒப்பிட்டு விளக்குகிறார்கள். அதாவது சீனாவின் புதிய இணைய இணைப்பு கைவசம் இருப்பில், ஒரே நொடியில் லியோ போன்ற 150 முழுநீளத் திரைப்படங்களை ஹெச்டி தரத்துடன் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதிவேக இணையம்
அதிவேக இணையம்

இந்த அசாத்திய இணைய வேகம் வருங்காலத்தில் வரவேற்புக்குரிய மாற்றங்களை நிகழ்த்த இருக்கின்றன. அவை கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தொழில்துறை மற்றும் இதர துறைகள் அடுத்த கட்டத்துக்கு தாவும்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in