`சமையல் எண்ணெய் விலை ஏற்றத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல'

போரை காரணம் சொல்லும் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா

"ரஷ்யா - உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலையேற்றத்துக்கு வணிகர் சங்கம் பொறுப்பாகாது" என நாமக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மண்டல பொதுக்குழு கூட்டத்தில் நாமக்கல்லில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மே 5ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ரஷ்யா - உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தவுடன் எண்ணெய் விலை 60 ரூபாய் உயர்ந்துள்ளது. பாமாயில் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போர் நின்ற பிறகுதான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்பதை கூற இயலாது. இந்த விலை ஏற்றத்திற்கும், வணிகர் சங்கத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை. விலை ஏற்றத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல. பதுக்கல் என்ற வாசகம் எங்களிடம் இல்லை. அது கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மட்டுமே உள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் அதனை கண்காணிக்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in