டெல்லியில் அதிகாலையில் தமிழக போலீஸ் அதிரடி... சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

பெலிக்ஸ் ஜெரால்டு
பெலிக்ஸ் ஜெரால்டு

சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை எடுத்து வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு
சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம்  போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்திய நிலையில் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப்  சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசன் பாபு,  பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். யூடியூப் சேனல்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தையும்  பதிவு செய்தார்.  

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது எனக் கூறி காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒரு வார காலம் ஒத்தி வைத்துள்ளார். பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். அவர்களின் தேடுதல் வேட்டையில் டெல்லியில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு இன்று அதிகாலை தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in