’டாஸ்மாக்கை மூடு; கள்ளுக்கடையை திற’ - எழுத்தாளர் இயக்கத்தின் வித்தியாச போராட்டம்!

கள்ளுக்கடையை திறக்கக்கோரி நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
கள்ளுக்கடையை திறக்கக்கோரி நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் மதுக்கடையை மூடிவிட்டு, கள்ளுக்கடையை திறக்கக்கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளுக்கடையை திறக்கக்கோரி எழுத்தாளர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தமிழ் தேவனார்
திருத்தமிழ் தேவனார்

இதுகுறித்து தெற்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் திருத்தமிழ் தேவனார் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகும். பழைய கஞ்சியை எவ்வாறு காலை உணவாக உட்கொள்கிறோமோ, அவ்வாறே காலை உணவாக கள்ளும் உட்கொள்ளப்பட்ட வரலாறு நம்மிடம் உண்டு. கள்ளுக்கு கூடுதல் சக்தியாக கிழங்கும் மீனும் உணவாக சேர்க்கப்படுகிறது. அவ்வாறு உட்கொள்கிறவரின் உடல் குளிர்ச்சி பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. உடலிலுள்ள நோய்களும், புண்களும் ஆறுகிறது.

கள்ளானது பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை வெட்டுவதால் வடியும் பாலிலிருந்து கிடைக்கிறது. இதுவொரு சிறந்த இயற்கை உணவாகும். இன்றைக்கு அரசு விற்பனை செய்கிற மதுக்களில் போதைக்காக இரசாயனம் கலக்கப்படுகிறது. அது, உடலுக்குக் கேடானது. “உடல் நலம்” என்பது இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்தியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அதுகுறித்து அரசியல்வாதிகள் இன்னும் விழிப்படையவில்லை. மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடும் என்பதே அவர்கள் குற்றச்சாட்டு. கஞ்சாவுக்கு இப்படியொரு பதிலினை அவர்களால் அளித்துவிட இயலுமா? கொஞ்சம் யோசித்தால் கள்ளுக் கடைகளை திறக்க வழி பிறக்கும். நாங்கள் கள்ளுக்கடையை திற என்பதன் பின்னால் டாஸ்மாக்கை மூடு என்னும் அழுத்தமான கோரிக்கையையும் வைக்கிறோம்” என்றார் அவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in