தமிழக காவல் துறை தேர்வில் தமிழ்மொழியில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே பணி!

புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழியில் தேர்ச்சித் தகுதி கட்டாயம் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் அரசுப் பணி நடத்தும் அனைத்து தேர்வு முகமைகளும் தமிழ் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவலர் தேர்வுகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி தமிழ் தகுதித்தேர்வு நடைபெறும் என்றும், இந்தத் தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு தமிழ் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாக நடத்தப்படும் 80 நிமிடங்கள் நடைபெறும் இந்தத் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், வழக்கம்போல் காவலர் பணி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி உள்ளிட்டவை நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்த்தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் காவலர் பணியில் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும், இந்தத் தகுதித்தேர்வு தமிழ் தெரிந்த தகுதியான நபர்களா என்பதைத் தெரிந்துகொள்ள மட்டுமே.

தமிழ்த்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே, வழக்கமாக நடைபெறும் எழுத்துத்தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் எனவும் சீருடை பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in