
"பெண்கள் நலனும் உரிமையும் காக்கப்படும். அதற்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்" என்று உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "புத்துலக ஆக்கத்திற்கு இன்றியமையாது இருக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகள். இரத்த பேதம், பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம் திராவிட இயக்கம். பெண்களின் சமூக, பொருளாதார உரிமைகளை மீட்டளிக்க முன்னத்தி ஏராக திமுக செயல்படுத்திய திட்டங்கள் இன்று நாட்டுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன.
சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மாறி வருகிறது. பெண்கள் நலனும் உரிமையும் காக்கப்படும். அதற்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே! புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்" என்று கூறியுள்ளார்.