
மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர். நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கெனவே விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தை பெண்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தவறாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.