பாரம்பரிய நெல் ரகத்துடன் சபைக்கு வந்த எம்எல்ஏக்கள்#TNBudget2022

பாரம்பரிய நெல் ரகத்துடன்
சபைக்கு வந்த எம்எல்ஏக்கள்#TNBudget2022

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட கூட்டத்திற்கு 'குழியடிச்சான்' பாரம்பரிய நெல் ரகத்துடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

தமிழ வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது சட்டப்பேரவைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி ராஜா, ச.அம்பேத்குமார் ஆகியோர் 'குழியடிச்சான்' பாரம்பரிய நெல் ரகத்துடன் வந்தனர்.

தமிழ்நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்றான குழியடிச்சான், கடும் வறட்சியையும் தாங்கக்கூடியதாகும். மழை, ஆழ்குழாய் கிணற்று நீரிலும் மகசூல் தரும். குறைந்த தண்ணீர் அல்லது ஈரப்பதம் இருந்தாலும், குழியில் கிடக்கும் நீரைக்கொண்டே துளிர்விட்டு தூர் வெடிப்பதால் குழியடிச்சான் என்று இந்த நெல்லுக்குப் பெயர் வந்தது. சுமார் நூறு நாட்களில் மகசூல் தரும் இந்த நெல், நான்கடி உயரம்வரை பொன்னிறமாக வளரும். அரிசி சிவப்பு நிறத்தில், தடிமனாக, முட்டை வடிவில் இருக்கும். குழியடிச்சான் அரிசி தாய்ப்பாலை நன்றாகச் சுரக்கச் செய்யும் குணமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.