வைஃபை, நவீன படுக்கை வசதியுடன் விடுதி - மதுரை வரும் பக்தர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!

வைஃபை, நவீன படுக்கை வசதியுடன் விடுதி - மதுரை வரும் பக்தர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!

" மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.35 கோடியில் 307 படுக்கை, வைஃபை வசதிகளுடன் நவீன தங்கும் விடுதி நடப்பாண்டிலேயே கட்டப்படும்" என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, "மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கோயிலுக்கு நவீன தங்கும் வசதி கட்ட அரசு முன் வருமா?" என திமுக வடக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கோ.தளபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துப் பேசுகையில், “ கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை போதே இதுகுறித்து அறிவிக்கப்பட்டது. இதன்படி 1.33 ஏக்கர் பரப்பளவில் 57 அறைகள், 307 படுக்கை வசதிகளுடன் ரூ.35 கோடி செலவில் தங்கும் விடுதி கட்ட திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே தங்கும் விடுதி கட்டித்தரப்படும் ” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in