'துபாய் சென்றது ஏன்?'- எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில்

'துபாய் சென்றது ஏன்?'- எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கினார்.

அப்போது அவர் பேசுகையில், " சொத்து வரி உயர்வை விருப்பத்துடன் செய்யவில்லை. புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும். மேலும், 2022-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். அரசின் முயற்சிக்கு வித்தியாசம் இன்றி அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய்க்கு அரசு முறை பயணம் சென்றேன். துபாய், அபுதாபி பயணத்தில் 14 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,100 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 12,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. துபாயில் உள்ள தமிழர்களைச் சந்தித்து, சொந்த மண்ணில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in