ஆளுநரை அமைச்சர்கள் திடீரென சந்தித்தது ஏன்?- பொன்முடி விளக்கம்

ஆளுநரை அமைச்சர்கள் திடீரென சந்தித்தது ஏன்?- பொன்முடி விளக்கம்

தமிழக ஆளுநரை அமைச்சர்கள் 2 பேர் திடீரென சந்தித்து பேசிய ஏன் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க, அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி உறுதிமொழியும் ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பிரின்ஸ் கஜேந்திர பாபு, இன்று தமிழகத்தில் இருக்கிற பல்வேறு கல்வியாளர்களை அழைத்து, தமிழகத்தில் மட்டுமல்ல, குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிற அன்பில் சடகோபன் பேராசிரியரையும் அழைத்து வந்து இங்கே சமூக நீதி பற்றியும் சமுத்துவம் பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தில் கல்விக்காக கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பற்றியும் ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திக்கிறார்.

இதனை தொடங்கி வைக்கும் வாய்ப்பையும் எனக்கு கொடுத்திருக்கிறார். தமிழக முதல்வரின் கனவுகளும், சமத்துவம் என்கிற அடிப்படையில் இருக்கிற காரணத்தினால்தான் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். உறுதிமொழியும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இதுதான் திராவிட மாடல். இந்த திராட மாடலை அம்பேத்கரும் சொல்லியிருக்கிறார். அதனை இன்று நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு தலைவர் தமிழக முதல்வர்.

ஒன்றிய அரசு மாநிலங்களுடைய கல்வி உரிமை பறிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிற இந்த சூழ்நிலையில், அவைகளையெல்லாம் தடுத்து நிறுத்தி, நீட் தேர்வாக இருந்தாலும், மத்திய பல்கலைக்கழகத்தில் நடத்த இருக்கிற நுழைவுத் தேர்வாக இருந்தாலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆளுநரை தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு சந்தித்து இருக்கிறார்கள். தமிழக அரசு அனுப்பிய கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து போடாமல் இருப்பது குறித்து பேசியிருக்கிறார்கள். அவர்களை முதல்வர் அனுப்பி இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க வாய்ப்பில்லை. இது ஏற்கெனவே முடிந்த கதை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in