உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கான உதவிகள் என்னென்ன? #TNBudget2022

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கான உதவிகள் என்னென்ன? #TNBudget2022

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களால், அந்நாட்டில் மருத்துவம் பயின்றுவந்த இந்திய மாணவர்கள், கொடும் போர்ச்சூழலுக்கு நடுவே நாடு திரும்ப வேண்டியதாகிவிட்டது. தமிழக மாணவர்கள் பலரும் உக்ரைனிலிருந்து திரும்பி வந்திருக்கும் நிலையில், அவர்களது மருத்துவக் கல்வி தொடர்வது எப்படி எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில், இன்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், “தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்கள் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இந்த மாணவர்கள், நம் நாட்டிலோ அல்லது பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டுவருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக் கல்விக்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்” என்று கூறினார். எனினும், என்னென்ன உதவிகள் செய்யப்படும், எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து விரிவாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழர்களைப் பத்திரமாக தமிழகத்துக்கு அழைத்து வர, பல்வேறு முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்தது. மீட்புப் பணிகளுக்காகத் தமிழக அரசு ரூ.3.50 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.