
முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளின் எடை இவ்வாண்டு கூடியிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் என 2 யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தாயை பிரிந்த குட்டிகள், கும்கியாக இருந்து ஓய்வு பெற்ற யானைகள், மனிதர்களை மிதித்து கொன்றதாக பிடிக்கப்பட்ட யானைகள் என 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளின் உடல்நிலையை பரிசோதிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எடை சரிபார்க்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளியில் உள்ள எடைமேடையில் யானைகளுக்கு எடை போடும் பணி இன்று தொடங்கியது. இதில் இரு முகாம்களில் இருந்து யானைகள் கொண்டுவரப்பட்டு எடை போடப்பட்டது. அவ்வாறு எடை போடும் யானைகளுக்கு எடை கூடும் பட்சத்தில், கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டறிந்து, அந்த யானைக்கு நடைப்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை குறைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள்.
மேலும் யானைகளுக்கு எடை குறையும் பட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு யானையை பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள். எடை போடும் பணி இன்று துவங்கியுள்ள நிலையில், கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ஒவ்வொரு யானையும் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!