தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்கவேண்டும்... கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

காவிரி
காவிரி

மே மாதத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விடவேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவிரி நீர் திறப்பு - கிருஷ்ணராஜ சாகர் அணை
காவிரி நீர் திறப்பு - கிருஷ்ணராஜ சாகர் அணை

இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், ‘நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 3.8 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டுள்ளது. மீதம் 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. அதேபோல ஜூன் மாதம் கர்நாடகா அரசு 9.17 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். அதனையும் கால தாமதம் இன்றி திறக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

இதேபோல், கர்நாடக அரசு அதிகாரிகள் முன் வைத்த வாதத்தில், ‘கர்நாடக அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட முடியாது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேகேதாட்டு
மேகேதாட்டு

இதன்பின்னர் இறுதியாக, காவிரியில் மே மாத இருப்புப்படி 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் வருகின்ற 21 ஆம் தேதி நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த இந்த முடிவின் மீது ஆலோசனை நடத்தப்படும். பின்னர் மீண்டும் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதியாக தண்ணீர் திறப்பு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in