இல்லம் தேடி மருத்துவப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி!

இல்லம் தேடி மருத்துவப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், தன்னார்வலர்கள் போன்றோர் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பணியாற்றும் 4,848 செவிலியர்களுக்கு மாதச் சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.

மேலும், “தேசிய நல்வாழ்வுக் குழுமத்தில் பணிபுரியும் 5,971 ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும். சுகாதாரப் பணியாளர்கள் 2,448 பேருக்கு 11 ஆயிரம் ரூபாயிலிருந்து 14 ஆயிரம் ரூபாயாக ஊதியம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

ஹெல்த்கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதனால் இந்தத் திட்டங்களின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in