அரசுப் பள்ளி மாணவிக்கு மூன்றாவது கண்; அசந்து போன கிராம மக்கள்!

மாணவி விஷ்ணு பிரியா
மாணவி விஷ்ணு பிரியா

பள்ளி மாணவி ஒருவருக்கு மூன்றாவது கண்ணாக அறிவுக்கண் இருப்பதை பார்த்து பலரும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாணவி விஷ்ணு பிரியா
மாணவி விஷ்ணு பிரியா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா - தேவி தம்பதியரின் இரண்டாவது மகள் விஷ்ணுப்பிரியா. இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்தபோது தனக்கு மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் இருப்பதை அறிந்து கொண்டதாக மாணவி விஷ்ணு பிரியா தெரிவிக்கிறார்.

தாயுடன், மாணவி விஷ்ணு பிரியா
தாயுடன், மாணவி விஷ்ணு பிரியா

விஷ்ணுபிரியா தனது பெற்றோர்களிடம் இது குறித்து கூறும் போது அவர்கள் அனைவரும் அதிசயமாகவும், ஆச்சிரியமாகவும் பார்த்துள்ளனர். இதையடுத்து, விஷ்ணுபிரியாவை சோதித்து பார்க்க நினைத்த பெற்றோர், மகளின் கண்களை கட்டிவிட்டு அவர் முன் ஒவ்வொருத்தராக நிறுத்தி இவர் யார் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஷ்ணுபிரியா மிகச்சரியாக சொல்லி பெற்றோர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ரூபாய் தாளில் உள்ள எண்களை சொல்லும் மாணவி விஷ்ணு பிரியா
ரூபாய் தாளில் உள்ள எண்களை சொல்லும் மாணவி விஷ்ணு பிரியா

இதை போலவே கண்களை கட்டிக்கொண்டு புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்கள், ஆதார் கார்டில் உள்ள எழுத்துகள் மற்றும் எண்கள், ஒவியங்களுக்கு கலர் கொடுத்தல், செல்போனில் சரியான பெயரை தேடி அவர்களுக்கு கால் செய்தல், வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்புதல் என அனைத்தையும் எந்த வித பயிற்சியும் இல்லாமல் கண்களை கட்டிக்கொண்டு செய்துள்ளார்.

வண்ணம் தீட்டும் மாணவி
வண்ணம் தீட்டும் மாணவி

இதனை பார்த்த அந்த ஊர் மக்கள் மாணவி விஷ்ணுபிரியாவுக்கு கடவுளின் சக்தி கிடைத்திருப்பதாகவே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தப் பயிற்சியும் மேற்கொள்ளாமல் பள்ளி மாணவிக்கு நெற்றிக்கண் திறந்திருப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in