அசத்தல்... பெட்ரோல், டீசல் கார்களை பேட்டரி கார்களாக மாற்றும் மெக்கானிக்; விழுப்புரம் வாலிபர் சாதனை!

மெக்கானிக் மணிகண்டன்
மெக்கானிக் மணிகண்டன்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே மெக்கானிக் ஒருவர் மோட்டார் உதவியுடன் குறைந்த செலவில் பேட்டரி கார்களை உருவாக்கி வருகிறார்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் பிரச்சினை மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக மின்சார கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான முன்னெடுப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பெட்ரோல் கார்களை மின்சார கார்களாக மாற்றும் பணி
பெட்ரோல் கார்களை மின்சார கார்களாக மாற்றும் பணி

இதனிடையே விழுப்புரத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் மிகக் குறைந்த செலவில் பெட்ரோல் வாகனங்களை, பேட்டரி கார்களாக மாற்றி தருவது பொது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரியபாபு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மெக்கானிக் மணிகண்டன். கடந்த பல ஆண்டுகளாக பேட்டரிகள் மூலம் கார்களை இயங்கச் செய்வது தொடர்பாக நடைமுறை ஆய்வுகளை மணிகண்டன் செய்து வந்துள்ளார். இதன் பலனாக வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஏற்கெனவே உள்ள பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களை அவர் பேட்டரி கார்களாக மாற்றித் தந்து வருகிறார்.

பெட்ரோல் கார்களை மின்சார கார்களாக மாற்றும் பணி
பெட்ரோல் கார்களை மின்சார கார்களாக மாற்றும் பணி

குறிப்பாக பழைய கார்களில் உள்ள இன்ஜின்களை அகற்றிவிட்டு, அதில் பேட்டரிகளை மட்டும் பொருத்தி இந்த வகை கார்களை அவர் வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போதைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் இந்த பேட்டரி கார்கள் உருவாக்கப்படுவதாகவும், தனக்கு தேவையான பொருளாதார உதவிகள் கிடைத்தால் இதை விடவும் குறைந்த விலையில் பேட்டரி கார்களாக மாற்றம் செய்து தரப்படும் எனவும், மணிகண்டன் தெரிவித்துள்ளார். மணிகண்டனின் இந்த முயற்சிக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in