’என் நெஞ்சில் குடியிருக்கும்...’ - வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய்!

விஜய்
விஜய்

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவர் ஏற்கெனவே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். அதோடு, தனது அரசியல் ஆசையையும் அவர் மறைக்கவில்லை என்றாலும், காலம் வரும்போது அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.

இந்த சூழலில் தான் அவர் கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பை கடந்த 2ம் தேதி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார்.

கட்சிக்கு தலைவராக விஜய் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விரைவில் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலையும் அவர் வெளியிட உள்ளார். நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீமான், அண்ணாமலை உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அந்த அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in