வாக்காளர்களிடம் மன்னிப்புக் கேட்ட விஜய்!

வாக்காளர்களிடம் மன்னிப்புக் கேட்ட விஜய்!
விஜய்

சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்களிடம் தன்னால் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்.

இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியதுமே சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தனது ரசிகர் மன்றத்தினருடன் புறப்பட்டுச் சென்றார் நடிகர் விஜய். அங்கு ஏற்கெனவே நிறைய பேர் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர். விஜயுடன் வந்த கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்ட காவல்துறையினர் விஜயை வரிசையில் நிற்க வைக்காமல் உள்ளே அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர். அப்போது ஏகப்பட்ட கும்பல் உள்ளே புகுந்தது அனைவருக்கும் இடையூறாக அமைந்தது. அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கீழே விழும் சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் சிலரும் நிலைதடுமாறி கீழே விழ நேர்ந்தது.

அதனால் வாக்களித்து விட்டு வெளியில் வந்த விஜய், தான் நேரடியாக உள்ளே சென்றதால்தான் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை வாக்காளர்களுக்கு ஏற்பட்டது என்பதை உணர்ந்து அங்கு வாக்களிக்க காத்திருந்த அனைவரிடமும் தன்னால் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்புக் கோரினார். அதேபோல, காவல்துறையினரும் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் விஜய்.

Related Stories

No stories found.